குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி  மனிதநேய அறக்கட்டளை தகவல் 

மனிதநேய அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2,792 இளநிலை உதவியாளர், 397 கிராம நிர்வாக அலுவலர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,491 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த 7-ம் தேதி வெளியிட்டது. 14-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு இல்லாத இத்தேர்வு வரும் செப்.1-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளுக்காக நடக்க உள்ள எழுத்துத் தேர்வுக்கு, சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகம் பயிற்சி அளிக்க உள்ளது. இத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் ‘www.mnfreeias.com’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் அனைவருக்கும் பயிற்சி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment