40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஆதிதிராவிடர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதி கோரி வழக்கு

ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதி கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இது குறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment