ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் எழுதினர்

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வை தமிழ்நாட் டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் எழுதினர். ஐஏஎஸ், ஐஎப்எஸ். ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலை களை உள்ளடக்கியது. இந்த நிலை யில், சிவில் சர்வீஸ் பணிகளில் 896 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு நாடு முழு வதும் 72 முக்கிய நகரங்களில் நேற்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை பொது அறிவு தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.40 மணி வரை சி-சாட் எனப்படும் திறனறி தாளும் நடைபெற்றன. இந்திய அளவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் பல்வேறு இடங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் அண்ணா சாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, மதரசா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் ராம கிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடந்தது. அடுத்தகட்ட தேர்வான முதன் மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என யுபிஎஸ்சி ஏற் கெனவே அறிவித்துள்ளது. எனவே, முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்துக்குள் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment