ஐஐடியில் 3 நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத் தும் வகையிலான அரங்குகளில் தொழில் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், தயாரிப்பு சாதனங்கள் இடம்பெறும். எரிசக்தி, தண்ணீர், கழிவு மேலாண்மை, தொழில்துறை, வேளாண்துறை தொடர்பான அரங்குகளையும் பார்க்கலாம். இக்கண்காட்சியை பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவியரும் இலவசமாகப் பார்வை யிடலாம். மாணவர்கள், சீருடையில் அடையாள அட்டையோடு வர வேண்டும். கண்காட்சியை இன்றும் நாளையும் (புதன், வியாழன்) காலை 9 மணி முதல் மாலை 5.15 மணி வரையும், கடைசி நாள் (வெள்ளி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பார்க்கலாம் என ஐஐடி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment