கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (3.6.2019) திறக்கப்படும்   அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் திட்டமிட்டபடி அனைத்து வகை பள்ளிகளும் நாளை திறக்கப்படும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார். ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதற்கேற்ப பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல், நோட்டு, சீருடை உட்பட அரசின் 14 வகை இலவ சப் பொருட்களும் வழங்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் கடுமையாக காணப்படு வதால், புதுச்சேரியை போல பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஜூன் 7-ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தக வலை பள்ளிக்கல்வித் துறை மறுத்துவிட்டது. இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர பள்ளிகள் வேலை நாட்கள் 210 வரை செயல்பட வேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கு பாடங்களை நடத்த போதிய நாட்கள் வேண்டும் என்ற அடிப் படையில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும். அதற்கான முழு ஏற்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது’’என்றார்.

No comments:

Post a Comment