மின் கட்டணத்தை 30% உயர்த்த மறைமுக ஏற்பாடு நடக்கிறது மின் ஊழியர் அமைப்பு குற்றச்சாட்டு

மின் கட்டணத்தை 30 சதவீதம் அளவுக்கு உயர்த்த மறைமுக ஏற்பாடுகள் நடைபெற்று வருவ தாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் கிளை 10-வது மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியம் பொதுத் துறை நிறுவனமாக நீடிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் மாநில மின் வாரியங்களை பிரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்தை பிரித்தால் மின்சாரம் என்பது சந்தைப் பொருளாக மாறிவிடும் அபாயம் உள்ளது. வசதி உள்ளவர்களுக்கே மின் சாரம் என்ற நிலை ஏற்படும். அடிக்கடி மின் மிகை மாநிலம் எனக் கூறிக்கொண்டாலும் நகர்ப் புறங்களில் மின் வெட்டு தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் உள்ளது. தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகி றோம். ஆனால், அரசோ தனியார் நிறுவனங்களிடம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது. மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என அரசு தெரிவித் தாலும் 30 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த மறை முக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே பணி வாய்ப்பு வழங்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங் கப்பட வேண்டும். பல ஆண்டு களாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். தீர்மானம் நிறைவேற்றம் முன்னதாக நடைபெற்ற மாநாட்டில், மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கு வதற்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment