அரசு வேலை வாய்ப்புகளில்  பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு 

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ்பானு என்ற திருநங்கை தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்த வரான திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலத்துறை ஆணையர் தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை, குடும்பநல அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடிசை மாற்று வாரியத் தின் சார்பிலும் கடந்த ஆண்டு வரை 515 வீடுகள் ஒதுக்கப்பட்டுள் ளன. முதியோர் ஓய்வூதிய திட்டத் தின் கீழ் 40 வயதைத் தாண்டிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017 டிச.21 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, ‘சாதி சான்றிதழ் இல்லாத மூன்றாம் பாலினத்த வர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவர். அதேபோல தன்னை பெண்ணாக அறிவித்துள்ள திருநங்கைகள் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கென உள்ள 30 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். எஞ்சிய மாற்று பாலினத்தவர்கள் பொதுப் பிரிவினருக்குரிய 70 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக் கலாம். மேலும், சுயதொழில் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூல மாக தலா ரூ. 50 ஆயிரம் வழங் கப்படுகிறது. தமிழகத்தில் திரு நங்கைகள் எந்தப்பெயரில் அழைக் கப்பட்டாலும் மூன்றாம் பாலினத்த வராகவே கருதப்படுவர். அவர் களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் உரிய இடஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகிறது. மேலும் அவர்களின் நலனைக் காக்க மாவட்டம் தோறும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment