2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 2 லட்சத்து 7 ஆயிரத்து 904 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சாலைகளில் வாகனங்களை ஓட்டி விபத்துக் களை ஏற்படுத்தியவர்கள், அதிவேகமாகவும் ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள், தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2018-ம் ஆண்டு 24 லட்சத்து 47 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அபராதமாக 27 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரத்து 430 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 8 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 350 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்த ஆண்டு மே மாதம் வரை 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்யும்படி போக்குவரத்து துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரையை ஏற்று அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தற் காலிகமாக ரத்து செய்துள்ளனர்.2018-ம் ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்தாண்டு மே மாதம் வரை 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்யும்படி போக்குவரத்து துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment