நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நர்ஸ்களுக்கு புதிய சலுகை தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரை

எம்பிபிஎஸ் படிப்பில் நேரடி யாக 2-ம் ஆண்டில் சேர நர்ஸ் கள், பல் மருத்துவர்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் மாற் றங்களைக் கொண்டு வருவது தொடர்பாக தேசியக் கல்வி வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் மருத்துவம், நர்சிங், பல் மருத் துவம் என தனித்தனியாக உள்ள மருத்துவக் கவுன்சில்களை குறைக்கவும் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லா மல் மருத்துவப் பல்கலைக்கழ கங்கள், மருத்துவக் கல்லூரி களுக்கு அங்கீகாரம் வழங்கு தல், மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்தல் போன்றவற் றுக்கு சிறப்பு ஏஜென்சிகளை நியமனம் செய்யவும் பரிந்துரை தரப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக் கான பொது தகுதித் தேர்வை யும் அறிமுகப்படுத்த இதில் பரிந்துரை அளிக்கப்பட்டு உள் ளது. மேலும், மாணவர்களுக்கு 50 சதவீதம் பேருக்கு கட்டாய உதவித் தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதில் 20 சதவீதம் பேருக்கு முழு உதவித் தொகை வழங்கவும் பரிந்துரை தரப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அறி வியல் பட்டதாரிகளும் பயில வசதியாக ஓராண்டு அல்லது 2 ஆண்டு அடிப்படை மருத் துவப் படிப்புகளை அறிமுகம் செய்யவும் கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொதுவான அடிப்படை படிப்புகள் அறிமுகம் செய்யப் பட்ட பின்னர் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற வேண் டும். இதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பல் மருத்துவம், நர்சிங் என தங்களுக்குப் பிடித்த படிப்பில் சேர்ந்து பயிலலாம். மேலும் நர்சிங், பல் மருத் துவ மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேரவும் இந்த வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கை வரைவை நாராயணா ஹெல்த் மருத்துவ நிறுவனத்தின் தலை வர் டாக்டர் தேவி ஷெட்டி உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய தாவது: நேரடியாக 2-ம் ஆண்டு படிப்பில் நர்சிங், பல் மருத்துவ மாணவர்கள் சேர் வதற்கு வரைவில் பரிந்துரை தரப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் நுழைவுத் தேர்வை எழுத வேண்டாம் என்று அர்த் தம் கொள்ளக்கூடாது. அவர் களும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னரே இந்த படிப்பு களில் சேர முடியும் என பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு படிப்பு நர்சிங் படிப்பு முடித்து எம்பிபிஎஸ் நேரடியாக சேர வேண்டும் என்றால் முதலில் நீட் தேர்வில் வெற்றி பெறவேண் டும். பின்னர் எம்பிபிஎஸ் படிப் பில் மீதமுள்ள 3 ஆண்டுகளை படிக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசை வழங்கப்படும். தற் போது இதை தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) வழங்கி வருகிறது. மருத்துவக் கவுன்சில்களுடன் இணைந்து இந்தப் பணியை என்ஏஏசி வழங்கி வருகிறது. தற்போது கல்வி கொள்கை வரைவில் சுதந்திரமான மதிப் பீட்டு ஏஜென்சிகள் உருவாக்க பரிந்துரை தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment