சிவாஜி கணேசன் குறித்த தகவல்கள் பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தில் சேர்ப்பு

பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தில் சிவாஜி கணேசன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நடிகர் சிவாஜி கணேசனுடனான தனது அனுபவத்தை ஒரு முக்கிய பகுதியாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக் காடு 'சிதம்பர நினைவுகள்' என்ற ஒரு நூலை எழுதினார். தமிழில் இந்நூல் வம்சி பதிப்பக வெளியீடாக வெளியானது. இந்த புத்தகத்தில் சிவாஜியை நேரில் சந்தித்த தனது அனுபவங்கள் மற்றும் அவரிடம் எடுத்த நேர்காணல் குறித்து பாலச் சந்திரன் சுள்ளிக்காடு குறிப்பிட்டி ருந்தார். இந்நூலில் இருந்து சிவாஜி கணேசன் குறித்த பல்வேறு சுவாரஸ் யமான தகவல்கள் தொகுக் கப்பட்டு பிளஸ் 2 பொதுத்தமிழ் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட் டுள்ளது. அதில், நடிகர் சிவாஜியின் நடிப்புத் திறனை புகழும் வித மாக பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, ‘சிவாஜி என்னை போல் நடிக்க முடியும், என்னால் சிவாஜியை போல் நடிக்க முடியாது‘என்று கூறியது, கட்டபொம்மன் உட்பட தான் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி சிவாஜி கூறிய முக்கிய தகவல்கள், பெற்ற விருதுகள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சிவாஜியின் நடிப்புத் திறமையை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக புதிய பாடத்திட்டத்தில் அவர் வாழ்க்கை வரலாறு மற்றும் முக்கிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment