ஹெச்சிஎல் வழங்கும் 'டெக் பீ' திட்டம் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறு வனம் மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது. ‘டெக் பீ' என்ற பெயரிலான இந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்களிலிருந்து பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள் ளதாக நிறுவனத்தின் துணை தலை வர் மதி சிவசங்கர் தெரிவித் துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக உத்தரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் இத்திட்டம் செயல்படுத்திப் பார்க் கப்பட்டது. அதில் மிகச் சிறந்த பலன் கிடைத்துள்ளது. இதை யடுத்து இதை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே செயல்படுத்தப் பட்ட டெக் பீ திட்டத்தின்கீழ் 700 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டு அவர்கள் தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். சிலர் மேற்படிப்பை தொடர்வதாகவும் குறிப்பிட்டார். எவ்வளவு பேர் இத்திட்டத்துக்கு தேவை என்று எண்ணிக்கை எதை யும் இறுதி செய்யவில்லை. இருப் பினும், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநி லங்களிலிருந்து மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். வட இந்தியாவில் ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்திராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலிருந்தும் டெக் பீ திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்ய உள்ளதாகக் கூறினார். குறிப்பாக இந்தப் பகுதிகளில் மட்டுமே தங்கள் நிறுவனத்துக்கு மேம்பாட்டு மையங்கள் இருப் பதாகவும், அவற்றில் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்க வசதி யாக இருக்கும் என்பதால் இப் பகுதிகளிலிருந்து மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கணித பாடத்தை கட்டாயமாகக் கொண்டு பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவர்கள் இத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை (ஸ்டைஃபண்ட்) வழங்கப்படும். பயிற்சி நிறைவு செய்த பிறகு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் ஊதியத்தில் அவர் களது திறமைக்கேற்ப பணி வழங் கப்படும். மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் பிட்ஸ் பிலானி மற்றும் சாஸ்திரா பல்கலை யில் படிக்கவும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அவர் குறிப் பிட்டார். தேர்வு செய்யப்படும் மாண வர்கள் கட்டாயம் 3 ஆண்டுகள் நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். -பிடிஐ

No comments:

Post a Comment