தமிழகத்தின் 29 மாவட்டங்களில்  1,829 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கியது தமிழக அரசு 

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இந்த நிதியாண்டில் 1,829 குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய காலத்தில் நடைமுறையில் இருந்த குடிமராமத்து திட்டத்தை கடந்த 2016-17 நிதியாண் டில் தமிழக அரசு மீண்டும் நடைமுறைப் படுத்தியது. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய இத்திட்டத்தின்கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இந்த நிதி யாண்டுக்கு ரூ.499 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுப்பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நீர்நிலைப் பகுதிகளை மீட்டெடுப் பதற்கு அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடிய குடிமராமத்து திட்டம் 2016-17-ம் ஆண்டில் அறிமுகமானது. இத்திட்டத்துக்கு 2017-ம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களின்கீழ் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 1,519 பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2 ஆயிரத்து 65 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.331 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்பின், இந்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு 29 மாவட்டங்களில் 1,511 பணிகளுக்கு ரூ.328 கோடியே 95 லட்சம் மதிப்புக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தப் பணிகள் நடந்துவந்த நிலை யில், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், அனுமதிக்கப்பட்ட 1,511 குடிமராமத்து பணிகளில், 979 பணிகள் ரூ.185.42 கோடி செலவில் முடிக்கப்பட்டு விட்டதாகவும், 2019-20-ம் ஆண்டில் 29 மாவட்டங்களை உள்ளடக்கி செய்ய வேண்டிய குடிமராமத்து பணிகளை குறிப்பிட்டு அப்பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆற்றின் கரைகளை பலப்படுத் துதல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல், பழுதுபார்த்தல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்தும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர், 29 மாவட்டங்களில் 1,829 குடிமராமத்து பணிகளுக்காக ரூ.499.68 கோடி தொகைக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என திருத்திய மதிப்பீடுகளை அரசுக்கு அளித்தார். திருத்திய மதிப்பீடுகளை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு, 29 மாவட்டங்களில் 2019-20-ம் ஆண்டுக்கு 1,829 குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள மாநில அரசின் 90 சதவீத தொகையான ரூ.449 கோடியே 71 லட்சத்தையும் சேர்த்து ரூ.499 கோடியே 98 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ள 499 கோடியே 98 லட்சத்தில், சென்னை மண்டலத்தில் 277 பணிகளுக்கு ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் 543 பணிகளுக்காக ரூ.109 கோடியே 88 லட்சம், மதுரை மண்டலத்தில் 681 பணிகளுக்கு ரூ.230 கோடி, கோவை மண்டலத்தில் 328 பணிகளுக்கு ரூ.66 கோடியே 80 லட்சமும் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு அளித்துள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment