தொடர்ந்து விலை உயருவதால் ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.504 அதிகரித்தது

தொடர்ந்து தங்கம் விலை உயருவதால் நேற்று ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 136-க்கு விற்பனை ஆனது. ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.504 அதிகரித்து உள்ளது. தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 4-ந்தேதி ஒரு பவுனுக்கு ரூ.168-ம், 5-ந்தேதி பவுனுக்கு ரூ.152-ம் என தங்கம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 123-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 984-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.19-ம், பவுனுக்கு ரூ.152-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 142-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 136-க்கும் விற்பனை ஆனது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.63-ம், பவுனுக்கு ரூ.504-ம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அதன் தொடர்ச்சியாக விலை உயர்ந்து பிப்ரவரி மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 840 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் தொடர் விலை உயர்வு காரணமாக, தற்போது மீண்டும் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் உயர்ந்து ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காரணம் என்ன? தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும், இதே நிலை வரும் நாட்களில் தொடரும் என்றும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.26 ஆயிரத்தை நெருங்கி செல்லும் என்றும்’ தெரிவித்தார்.

No comments:

Post a Comment