25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் படிக்க கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் கடந்த மாதம் (மே) 18-ந் தேதி வரை ஆன்-லைனில் பெற்றோர் விண்ணப்பித்தனர். இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களான 480 பேருக்கு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. அதேபோல், இடஒதுக்கீட்டுக்கு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அந்த பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர். இந்தநிலையில் இடஒதுக்கீட்டை விட அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது. அந்த பள்ளிகளில் எத்தனை பேர் சேர்ந்து இருக்கின்றனர் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment