கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் மத்திய அரசு சட்டத்தை ஏற்று தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் கடைகள், தொழில், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தூங்கா நகரம் என அழைக் கப்படுவது மதுரை மாநகரம். இதுபோல, பல நகரங்களில் இரவு நேரத்திலும்கூட டீக்கடைகள், உணவகங்கள் இயங்கிய காலம் உண்டு. பெரும்பாலும் பேருந்து நிலையங்களில் அனைத்து கடைகளும் இரவு நேரத்தில் இயங்கி வந்தன. ஆனால், குற்றங்கள் அதிகரித்ததால் இரவில் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இரவு 10 மணிக்குமேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதனால், தற்போது மதுரை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் முக்கிய பேருந்து நிலையங்கள் தவிர மற்ற இடங் களில் இரவு 11 மணிக்கு கடைகள் மூடப் பட்டு அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே திறக்கப்படுகின்றன. இந்நிலையில், கடை கள், நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற் றும் பணிக் கட்டுப்பாடுகள் விதி) தொடர் பான மாதிரி வரைவு சட்ட முன்வடிவை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தொழி லாளர் நலத்துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தியது. அதைத் தொடர்ந்து மாநிலங் கள் வாயிலாக வேலைவாய்ப்பு வழங் கும் நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்பு கள் என பல்வேறு தரப்பினரின் கருத்து கள் கேட்கப்பட்டு அந்த சட்ட முன்வடிவு இறுதி வடிவம் பெற்றது. தமிழகத்தில் சூழலுக்கேற்ப சில மாற்றங்கள் செய் யப்பட்டு அந்த மாதிரி சட்ட முன்வடிவு ஏற்கப்பட்டது. கடந்த 2016 ஜூன் 5-ம் தேதி மாதிரி சட்ட முன்வடிவு வெளியான நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘வணிகம் மேற்கொள்ளுதல் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் நாடு முழு வதும் ஒரே மாதிரியான நிலையை உரு வாக்கும் நோக்கில் இந்த வரைவு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்டின் 365 நாட்களும் கடைகள், வணிக நிறுவனங்கள் தடையின்றி இயங்குவதற்கும், நிறுவனங் களை திறந்து மூடுவது, பெண்களை இரவுப் பணியில் ஈடுபடுத்தும்போது அவர் களுக்கு தங்குமிடம், கழிவறை, போது மான பாதுகாப்பு மற்றும் போக்குவுரத்து வசதிகளை செய்து தரவேண்டும். பெண்களை பணிக்கு தேர்வு செய்வது, பயிற்சி, இடமாற்றம், பதவி உயர்வு இவற்றில் பாகுபாடு காட்டக்கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்களை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதை ஏற்று தமிழக தொழிலாளர் நல ஆணையர், தமிழகத்தில் உள்ள கடை கள், வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இயங்க முதல்கட்டமாக, சில கட்டுப்பாடுகளுடன் 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்க அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு, முதல்கட்டமாக 3 ஆண்டு களுக்கு 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது தொடர்பாக, தொழிலாளர் துறை செயலர் சுனில் பாலிவால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத் தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அலுவலகத்தில் அனைவரும் பார்க்கும் இடங்களில் வைக்க வேண்டும். பணியாளர்களுக்கான ஊதியம், கூடுதல் நேரப்பணிக்கான ஊதியம் ஆகியவற்றை அவர்கள் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும். பணியாளர்கள் யாருக்கும் 8 மணி நேரத்துக்குமேல் அதாவது வாரம் 48 மணி நேரத்துக்குமேல் பணி வழங்கக் கூடாது. கூடுதல் நேரம் பணியில் அமர்த்தினால் இரண்டரை மணி நேரம் அதாவது பத்தரை மணி நேரம் என்ற வகையில் வாரத்துக்கு 57 மணி நேரம் மட்டுமே பணி வழங்கலாம். விடுமுறை நாட்கள் அல்லது வழக்க மான பணி நேரத்தைவிட அதிகமான நேரம் பணியாளர்களை பணிக்கு அமர்த் தும் நிறுவனங்கள், மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண நாட்களில் இரவு 8 மணிக்கு மேல் பெண் பணியாளர்களை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற வேண்டிய நிலையில் அந்த பெண் ஊழியரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று காலை 6 மணி வரை பணியாற்ற அனுமதிக்கலாம். அதேநேரம் அப்பணியாளருக்கு போதுமான பாது காப்பு அளிக்க வேண்டும். பெண் பணி யாளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு களையும் செய்ய வேண்டும். பணி யாளர்களுக்கு தேவையான ஓய்வறை, கழிப்பறை, பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தில் பாலியல் தொந் தரவுக்கு எதிரான புகார்கள் குழு உரு வாக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment