அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24 முதல் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிட்டது. அதன்படி, இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி முடிவடைகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான பாடங்களில் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும் அதோடு பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு எம்பிஎட் பட்டம் அவசியம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் குறிப்பிட்ட தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத் தப்படும். தேர்வு தேதி பின்னர் அறி விக்கப்படும். மொத்த காலியிடங் களில் தமிழ்வழியில் படித்தவர் களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்ச காலியிடமாக வேதியி யல் பாடத்தில் 356 காலியிடங் களும், அதற்கு அடுத்தபடியாக தமிழ் பாடத்தில் 319காலியிடங் களும், கணிதத்தில் 273 காலியிடங் களும் ஆங்கிலம் பாடத்தில் 223 காலியிடங்களும் இடம் பெற் றுள்ளன. விரைவில் நடைபெற வுள்ள கணினி ஆசிரியர் தேர்வைப் போன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment