தமிழகத்தில் காற்று மாசு கட்டுக்குள் இருக்கிறது  24 இடங்களில் மாசு கண்காணிப்பு கருவி விரைவில் செயல்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் உறுதி 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் கோளரங்கத்தில் நடைபெற்ற காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று கையேட்டினை வெளியிட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன் சென்னை தமிழகத்தில் காற்று மாசு கட்டுக்குள் இருக்கிறது, 24 இடங் களில் வைக்கப்பட்டுள்ள மாசு கண்காணிப்புக் கருவிகள் விரை வில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, காற்று மாசுவைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்தப் பேரணியை தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கருப்பணன் கூறியதாவது: சுற்றுச் சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ரமலான் பண்டிகை என்பதால், இன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு செய்யும். இந்த ஆண்டு காற்று மாசு பற்றி ஆய்வு செய்ய உள்ளது. தமிழகத்தில் 12 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. தற்போது மேலும், 24 இடங்களில் நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ரூ.24 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டு 15 இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. இவை விரைவில் செயல்படும். இன்றைய நிலையில் தூத்துக்குடியில் அதிக மாசு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. நிலக்கரி அதிக அளவில் அங்கு இறக்குமதி செய்வதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இருப்பினும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பெருநகரங்களைக் கண்காணிக்கும் போது தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ‘‘வீட்டில் எந்தெந்த மரங்களை வளர்த்தால் காற்று மாசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்த கையேடு பொதுமக்களுக்கு வழங் கப்பட்டு வருகிறது. இது ஆங்கி லத்தில் உள்ள நிலையில் மொழி பெயர்த்து விரைவில் தமிழில் வழங்குமாறு கூறியுள்ளோம். வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறையால் வசிப் பிடத்தை விட்டு வெளியில் வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், உணவு கிடைக்கும் இடங்களிலேயே அவற்றுக்கு தண்ணீர் கொடுக்க நட வடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார். இந் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஜெயந்தி முரளி, உறுப்பினர் செயலர் டி.சேகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பெ.துரைராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment