ஜூன் 21ல் பல்கலை.களில் யோகா ; யுஜிசி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 21 ல், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு, (யு.ஜி.சி.,) துணைவேந்தர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் நடைபெற உள்ள யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி, அன்றைய தினம் பீகார் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ல், முதல் முறை மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டு, ஐ.நா., சர்வதேச யோகா தினத்தை அங்கீகரித்துள்ளது. அதன் பின்னர் நாடு தோறும் உடல் நலம் பேணும் யோகா மீதான ஆர்வம் மேலை நாடுகளிலும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment