200 இடங்களுக்கு 1.45 லட்சம் பேர் போட்டி: ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு

புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும், காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 25 மாநிலங்களில் உள்ள 132 நகரங்களில் 280 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுகள் காலை, மாலை என இருவேளைகளில் நடந்தது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரையிலும் நடந்தன. 1.84 லட்சம் பேர் புதுவையில் கிறிஸ்ட் என்ஜினீயரிங் கல்லூரி, மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி என 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மாற்று திறனாளிகளுக்காக தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். புதுச்சேரியில் 2 ஆயிரத்து 279 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதாவது காலையில் நடந்த தேர்வை எழுத 94 ஆயிரத்து 73 மாணவ, மாணவிகளும், பிற்பகலில் நடந்த தேர்வை 90 ஆயிரத்து 199 மாணவ, மாணவிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 467 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். 21-ந்தேதிக்குள் முடிவு தேர்வு முடிவுகள் வருகிற 21-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் முதல்கட்ட கலந்தாய்வு நடந்து வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment