உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, June 2, 2019

வேலை வாய்ப்புக்கு பிளஸ் 2 கல்வித்தகுதியை அந்தந்த பள்ளியில் பதியலாம்

வேலை வாய்ப்புக்கு பிளஸ் 2 கல்வித்தகுதியை அந்தந்த பள்ளியில் பதியலாம் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: 10, 12-ம் வகுப்பு மாணவர் கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் (www. tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெறும் முறை 2011-ம் முதல் நடை முறையில் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத் துக்கு நேரில் செல்லாமல் துறை யின் இணையதளம் வாயிலாக பதிவுசெய்து கொள்ள வசதி ஏற்படுத்தியதால், மாணவர் களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவை யற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு பள்ளிகளில் திங்கள் கிழமை (இன்று) மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் திங்கள்கிழமை முதல் ஜூன் 17 வரை 15 நாட்கள் பள்ளியிலேயே தங்கள் கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவுசெய்ய பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவ ருக்கும் ஒரேநாள் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) வழங்கப்படும். எனவே, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி பதிவு மேற்கொள்ளலாம். ஏற்கெனவே பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து இருந்தால் அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற் றும் ஆதார் அட்டையுடன் சென்று 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை கூடுதலாக பதிவுசெய்து கொள்ளலாம். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) தாங்களே பதிவுசெய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment