சென்னையில் 2 நாள் ரஷ்ய கல்வி கண்காட்சி. ஜூன் 8, 9 தேதிகளில் நடக்கிறது .  நீட் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சேர்க்கை பெறலாம்

ரஷ்யாவை சேர்ந்த 10 பல்கலைக் கழகங்கள் பங்கேற்கும் 2 நாள் வழிகாட்டி கல்விக் கண்காட்சி சென் னையில் வரும் 8, 9 தேதிகளில் நடக்க உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இக்கண் காட்சியின்போது, ரஷ்யாவில் மருத்துவம் படிக்க நேரடியாக அட் மிஷன் பெறலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதர் யூரி எஸ்.பிலோவ், கலாச்சார துணை தூதர் ஜெனடி ரோகலேவ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகின் பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வி பயில விரும்பும் 6 நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பெரும்பாலோர் பொறியியல், மருத்துவம், ஏரோநாடிகல் சயின்ஸ், அணுசக்தி தொடர்பான படிப்பு களில் சேருகின்றனர். குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி என் பதுதான் ரஷ்யாவின் தனிச்சிறப்பு. இந்திய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரஷ்யாவில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 3 ஆயிரத் தில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக் கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 10 பல்கலைக் கழகங்கள் பங்கேற்கும் 2 நாள் வழிகாட்டி கல்விக் கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டை கஸ் தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய அறிவியல், கலாச்சார மையத்தில் வரும் 8, 9 தேதிகளில் (சனி, ஞாயிறு) நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும். மருத்துவம் மட்டுமின்றி, பொறி யியல் உள்ளிட்ட இதர பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் மாண வர்களும் கண்காட்சிக்கு வரலாம். மாணவர்களும், பெற்றோரும் ரஷ்யக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, ரஷ்ய படிப்புகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம். ரஷ்யக் கல்வி முறை, விடுதி வசதிகள், வெளிநாட்டு மாணவர் களுக்கு வழங்கப்படும் பலவித மான கல்வி உதவித்தொகை, விசா நடைமுறை போன்ற விவரங் களையும் தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் இக்கண் காட்சியின்போது, ரஷ்யாவில் மருத்துவம் படிக்க நேரடியாக அட்மிஷன் பெறலாம். உரிய கல்விச் சான்றிதழ்களுடன் வருபவர்கள் நேரடியாக ரஷ்ய கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். ரஷ்ய அறிவியல், கலாச்சார மையமும், அதன் அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனமான ஸ்டடி அப்ராடு நிறுவனமும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின் றன. ஸ்டடி அப்ராடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியதாவது: ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிப்பு ‘எம்.டி’ என்ற பெயரில் 6 ஆண்டு கால படிப்பாக வழங்கப்படுகிறது. இதை முடித்துவிட்டு மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு கால பயிற்சி முடித்தால், இதை எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையானதாக இந் திய மருத்துவ கவுன்சில் ஏற்றுக் கொள்ளும். ரஷ்யாவில் அரசு பல்கலைக்கழ கங்கள்தான் மருத்துவ படிப்பை வழங்குகின்றன. எனவே, குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க இது நல்ல வாய்ப்பு. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் தேவையான மருத்துவ இடங்கள் இந்தியாவில் இல்லை. எனவே, நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரஷ்யாவில் ஆங்கிலவழியில் மருத்துவம் படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment