சந்திரயான்-2 ஜூலை 15-ல் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

நிலவை ஆய்வு செய்வதற்காக சந் திரயான் - 2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி அதி காலை 2.51 மணிக்கு ஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் அறிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்டது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அதில் நிலவில் நீர் இருப்ப தற்கான ஆதாரங்களை உறுதி செய்து ஆயிரக்கணக்கான புகைப் படங்களை எடுத்து அனுப்பியது. ரூ.800 கோடி செலவில் உரு வாக்கப்பட்ட சந்திரயான் - 1 திட்டம் வெற்றி பெற்றதால் விண்வெளித் துறையில் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதையடுத்து, நிலவை மேலும் ஆராய சந்திரயான் - 2 விண் கலத்தை ஏவ இஸ்ரோ முடிவெடுத் தது. அதன்படி நிலவின் மேற் பரப்பையும், தென்துருவ முனை யையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டது. இந்த சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2018 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்ட மிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் விண்ணில் செலுத் தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் கே. சிவன் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51-க்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும். ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் ஏவு வதற்கான ஏற்பாடுகள் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகின்றன.

சந்திரயான் - 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளையும் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட் சுமந்து செல்கிறது. இதில் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக் யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறும்.

நிலவின் மேற்பரப்பை அடைந்த பிறகு லேண்டரும், ரோவரும் தனியாகப் பிரிந்து சென்று நிலவின் தென் துருவ தரைப் பகுதியை அடையும். பின்னர் லேண்டரில் இருந்து விடுபடும் ரோவர் வாகனம் நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதில் மொத்தம் 13 வகையான கருவிகள், நவீன முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் 6-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலவில் தரையிறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

விண்ணில் ஏவப்பட்ட 14 - வது நாளில் சந்திரயான்-2 நிலவை எட்டி ஆய்வுகளை தொடங்கும். சந்திரயான் - 2 தான் நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் விண்கலம். இந்த ப‌குதியில் இதுவரை உலகில் வேறு எந்த நாடும் ஆய்வு செய்த தில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட சந்திரயான் - 1 விண் கலத்தை விட, சந்திரயான் - 2 தொழில்நுட்ப அளவில் அதிக வளர்ச்சி பெற்றதாக உருவாக்கப் பட்டுள்ள‌து. சந்திரயான் -2 விண் கலம் ரூ.603 கோடி செலவிலும், அதனை செலுத்தும் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட் ரூ.375 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டுள் ளன. இதன் மொத்த எடை 3.8 டன் ஆகும்''என்றார்.

இந்த பேட்டியின் போது சந்திர யான்- 2 விண்கலம் செயல்படும் விதம் குறித்த வீடியோ காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment