ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாள் திருவள்ளூர் மாவட்டத்தில் 1,179 பேர் பங்கேற்கவில்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) 2-ம் தாளை நேற்று 1,179 பேர் எழுதவில்லை என மாவட்ட பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 8-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவுற்றது. இதில், முதல் தாள் தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 23 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த 8,784 பேரில் 7,881 பேர் எழுதினர்; 903 பேர் எழுதவில்லை. இச்சூழலில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத் தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 32 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்த 12,983 பேரில் 11,804 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,179 பேர் தேர்வு எழுதவில்லை என, மாவட்ட பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment