ஆசிரியர் தகுதி தேர்வு இன்று தொடக்கம் முதல் தாள் தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழு வதும் 471 மையங்களில் முதல் தாள் தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதுகின்றனர். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு 2 தாள் களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப்பெண் களுக்கு தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலை யில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி முடிந்தது. தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் முதல் தாள் எழுத ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் இன்றும் (ஜூன் 8), நாளையும் (ஜூன் 9) நடைபெற உள்ளது. இதற்காக முதல் தாளுக்கு 471, 2-ம் தாளுக்கு 1,081 என மாநிலம் முழுவதும் 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. செல்போன் உட்பட மின்னணு பொருட்களை தேர் வறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற் கிடையே 2010-ம் ஆண்டுக்குபின் அரசு உதவி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் இதுவரை டெட் தேர்ச்சி பெறாத 1,500 பேர் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.2010-ம் ஆண்டுக்குபின் அரசு உதவி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் இதுவரை டெட் தேர்ச்சி பெறாத 1,500 பேர் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

No comments:

Post a Comment