அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர கலந்தாய்வு நாளை (17.06.2019) தொடங்குகிறது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம்.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கு 3 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 2 ஆயிரத்து 747 விண்ணப்பங்கள் தகுதியானவையாக எடுத்து கொள்ளப்பட்டன. கடந்த 8-ந்தேதி தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கலந்தாய்வை நடத்த இருக்கிறது. பி.காம்.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது. பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளுக்கு நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த 4 பட்டப்படிப்புகளுக்கும் காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 19-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. கலந்தாய்வில் மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்து கொள்ள வேண்டும். கட்-ஆப் மதிப்பெண் http://tnd-alu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment