நீட், எய்ம்ஸ் போட்டித் தேர்வுகளில் இதுவரை 1.6 லட்சம் பேரை வெற்றி பெற செய்துள்ள ஸ்பீடு இன்ஸ்டிடியூட்

ஸ்பீடு இன்ஸ்டிடியூட் 2002-ம் ஆண்டு டாக்டர் க.விநாயக் செந்தில் என்பவ ரால் தொடங்கப்பட்டது. இதுவரை 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மருத்துவம், முதுநிலை மருத்துவம், சிறப்பு மேல்நிலை மருத் துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறை களில் பயிற்சி அளித்து, அவர்களை நீட், ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற அகில இந்திய மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்துள்ளது. தற்போது ஐஐடி/ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஸ்பீடு இன்ஸ்டிடியூட் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய செயற்கைக் கோள் மற்றும் நேர்முக பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 412 பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன. ஸ்பீடு இன்ஸ்டிடியூட் அகில இந்திய தரத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சிக் கையேடுகளை வடி வமைத்துள்ளது. இதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி நோக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்பீடு இன்ஸ்டிடியூட் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment