அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15 வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு

அரசு ஐடிஐ-க்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி நாள் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐடிஐ) சேரவும், அரசு உதவி பெறும் ஐடிஐ-க் கள் மற்றும் தனியார் சுயநிதி ஐடிஐ-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மே 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண் ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகியும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு பயிற்சித் துறை ஆணையர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment