பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15,000 ஊக்கப்பரிசு

பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15,000 ஊக்கப்பரிசு. அதன் ஒரு கட்டமாக, ‘ராஜண்ணா படி பாட்டா’ என்ற கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல், முதன்முதலாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு ஜாதி, மத பேதமின்றி, ‘அக்ஷ்ராப்யஸம்’ எனும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.இதில், குண்டூரில் உள்ள ஓர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: ஆந்திராவில் கல்விப் புரட்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலும் மாற்றியமைக்கப்படும். பள்ளிகளுக்கு செல்லாத பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.அப்படி அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டுதோறும் ரூ. 15,000 ஊக்கப்பரிசு வழங்கப்படும். இத்திட்டமானது, வருகிற குடியரசு தினத்தில் அமல்படுத்தப்படும் என அவர் பேசினார்.

No comments:

Post a Comment