கால்நடை மருத்துவ படிப்புக்கு 12,177 பேர் விண்ணப்பம் 10-ந் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் பெற்று கடந்த மாதம் (மே) 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புக்கு 12 ஆயிரத்து 177 மாணவ-மாணவிகளும், பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 2,099 மாணவ-மாணவிகளும் விண்ணப்பித்து இருக்கின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 10-ந்தேதி ஆகும். அன்றைய தினம் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரத்தில் நடைபெறும். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment