தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் 12-ம் தேதி வரை நடக்கிறது

பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 உதவி மையங்களில் நேற்று தொடங்கி யது. முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 23 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ளஇடங்களில் சேர ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 2-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7 முதல் 12-ம் தேதிவரை 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு நாள், நேரம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழு வதும் நேற்று தொடங்கியது. சென்னையில் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக், கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், பிர்லா கோளரங்கம் ஆகிய இடங்களில் மொத்தம் 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவர் களின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் (டிசி), சாதிசான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சென்னையில் உள்ள அனைத்து மையங்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சான்றிதழ் சரிபார்ப்பு பணியைதமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரி கள் கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வாறு கண்காணித்தனர். ஒரு மையத்துக்கு 500 பேர் வீதம் 46 மையங்களையும் சேர்த்து 23 ஆயிரம் பேர் முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாக புருஷோத்தமன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment