மருத்துவ படிப்பில் சேரும் எண்ணிக்கை சரிவதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதலே நீட் தேர்வு பயிற்சி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை

நீட் தேர்வுக்குபின் மருத்துவப் படிப்பு களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து வரு கிறது. இதனால் நீட் பயிற்சியை 11-ம் வகுப்பு முதலே மாணவர் களுக்கு வழங்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை 1.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9 சதவீதம் அதிகம். எனினும், மாநில தேர்ச்சி பட்டியலில் தமிழகம் பின்தங்கிவிட் டது. மேலும், தேசிய அளவில் டாப் 50 பட்டியலிலும் தமிழக மாண வர்கள் இடம்பெறவில்லை. அதிக பட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடத்தை பிடித்திருந்தார். இதுதவிர 600 மதிப்பெண்ணுக்கு மேல் 135 மாணவர்களும், 500-க் கும் அதிகமாக 1,329 பேரும் 400-க்கும் மேல் 5,634 பேரும் பெற்றுள்ளனர். இதனால் நடப்பு ஆண்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு மாணவர்களிடம் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறும்போது, ‘‘தமிழ கத்தில் 23 அரசு மருத்துவக் கல்லுாரி களும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி யும் உள்ளன. இதில் மருத்துவப் படிப்புகளுக்கு 15 சதவீத தேசிய ஒதுக்கீடு போக 3,100 இடங்கள் வரை இருக்கிறது. மறுபுறம் நீட் தேர்ச்சியில் தமிழக மாணவர்கள் 9,339 பேர் 350 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில் 3,300 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதியவர்கள். ஒட்டுமொத்தமாக 5,634 மாணவர்கள் 400 மதிப் பெண்களுக்கும் அதிகமாக பெற் றுள்ளதால் இந்த ஆண்டு அரசு மருத் துக் கல்லுாரிகளில் சேர கடும் போட்டி நிலவும். கடந்த ஆண்டுடன் ஒப் பிடும்போது கட்-ஆஃப் மதிப்பெண் 100 வரை அதிகரிக்க வாய்ப்புள் ளது. அதன்படி கட்-ஆஃப் மதிப்பெண்ணாக ஓசி பிரிவுக்கு 520-530, பிசி பிரிவுக்கு 468-478, எம்பிசி பிரிவுக்கு 430-440, எஸ்சி பிரிவுக்கு 365-375 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 மதிப்பெண் வரை மாற்றம் இருக்கக்கூடும்’’என்றார்.

மறுபுறம் நீட் தேர்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் செயல்பாடு தொடர்ந்து சரிவில் பயணிக்கிறது. கடந்த ஆண்டு 4 அரசுப் பள்ளி உட்பட 30 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைத்தது. ஆனால், நடப்பு ஆண்டு அந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நீட் தேர்வில் 1,337 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களில் இருந்து 19,680 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 2,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர் மட்டுமே 350-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் என உறுதியாக கூறமுடியாது. தரவரிசை பட்டியல் வெளியான பின்னரே அதன் விவரம் தெரியவரும்’’ என்றனர்.

நீட் தேர்வுக்குமுன் மருத்துவப் படிப்புகளில் சராசரியாக 30 பேர் வரை அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், நீட் வருகைக்குபின் 3 அல்லது 4 பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரிகளில் சேருகின்றனர். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க அரசு சார்பில் 412 மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் சிறந்து விளங்கும் மாண வர்களுக்கு தேர்வு நெருங்கும் சமயத்தில் உண்டு, உறைவிட வசதியுடன் ஒரு மாதகாலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறைவாக இருப்பதால் அரசு மையங்களின் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, ‘‘அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்தும் சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் ஒருவர்கூட அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர முடியாது என்பது வேதனையளிக்கிறது. இதற் காக அரசுப்பள்ளி மாணவர் கள் திறனற்றவர்கள் என அர்த்த மில்லை. நம் மாணவர்களுக்கு சரி யான வழிகாட்டுதல்களும் பயிற்சி களும் வழங்கப்படுவதில்லை. தேர்ச்சி பெற்றவர்களில் பலர் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே, 11-ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு நீட் பயிற்சிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

புதிய பாடத்திட்டம் சிறப்பாகவும் சிபிஎஸ்சிக்கு நிகராகவும் உள்ளது. இதேபோல், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அரசு மையங்களிலும் பயிற்சியின் தரத்தை உயர்த்த வேண்டும். வரும் ஆண்டில் குறைந்தது 100 மாணவர்களாவது மருத்துவப் படிப்புகளில் சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment