காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக் கடலில் உருவானது இன்று (11.06.2019) புயலாக மாறும் என தகவல்

அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அரபிக் கடலில் நிலவிய வலு வான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க் கிழமை) புயலாக மாறக்கூடும். இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். புயலின் தாக்கம் குறைந்தபின் தென் மேற்கு பருவக்காற்று மீண்டும் வேகம் எடுத்து, தமிழகத்துக்கு மழை யைக் கொடுக்கும். திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன் னியாகுமரி மாவட்டம் குழித்துறை யில் 7 செமீ, இரணியலில் 5 செமீ, தக்கலை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகிய இடங்களில் தலா 4 செமீ, கன்னியாகுமரி, மயிலாடி, பூதப்பாண்டி, குளச்சல் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. 3 நாட்களுக்கு அனல் காற்று சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும். இவ்வாறு ந.புவியரசன் கூறி னார்.

No comments:

Post a Comment