11 நகரங்களில் வெயில் சதம் 12 மாவட்டத்தில் வெப்பம் நீடிக்கும்

தமிழகத்தில் நேற்று 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு 12 மாவட்டங்களில் அதிக வெப்பம் நீடிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது: கேரளாவில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பரவியுள்ளது. இதர பகுதிகளில் பரவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தரும புரி, திருச்சி, புதுக்கோட்டை, சிவ கங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக் காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித் துறை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 5 செமீ, நாகர்கோவிலில் 4 செமீ, தக்கலையில் 2 செமீ, மயிலாடி, இரணியல் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 109 டிகிரி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி, மதுரை தெற்கில் 106 டிகிரி, திருச்சியில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 5 டிகிரி வரை உயரும் அடுத்த சில தினங்களுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், திரு வண்ணாமலை, வேலூர், விழுப் புரம், கடலூர், புதுச்சேரி, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங் களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment