11 நகரங்களில் 100 டிகிரி வெயில் தமிழகம், புதுவையில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அரபிக்கடலில் கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதி யில் காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகியுள்ளது. இவை காரண மாகவும், வெப்பச் சலனம் காரண மாகவும் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், நாமக்கல், கரூர், தேனி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சூறைக் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 7 செமீ, தருமபுரியில் 4 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, வேலூர் மாவட் டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், சேலம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக திருத்தணி, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, கடலூரில் 104 டிகிரி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினத்தில் 103 டிகிரி, வேலூரில் 102 டிகிரி, திருச்சி, காரைக்கால், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, புதுச்சேரி, சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி பதிவாகியுள்ளது. அரபிக்கடலின் தென் பகுதி யில் மேகக்கூட்டங்கள் திரண்டுள் ளன. விரைவில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும்.

No comments:

Post a Comment