ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாக எடுத்தால் வரி  நடைமுறைப்படுத்த அரசு திட்டம் 

ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க அரசு புதிய கட்டுப் பாடுகளைக் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மற்றும் அதற்கும் மேல் ரொக்கமாக வங்கிகளிலிருந்து எடுத்தால் அதற்கு வரி விதிக்க அரசு முயற்சி எடுத்துவருகிறது. மேலும், உயர் மதிப்பில் பணம் எடுத்தால் ஆதார் எண்ணைக் குறிப் பிடுவது கட்டாயமாக்கவும் திட்ட மிட்டுள்ளது. கருப்புப் பணத்தை தடுக்க.. நாட்டில் ரொக்கப் பணப் பரிவர்த் தனையைக் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் மற்றும் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்கவும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது ரூ.50 ஆயிரத்துக் கும் மேல் இருப்பு வைப்பதற்கு பான் எண் கட்டாயமாக உள் ளது. இனி உயர் மதிப்பிலான பணம் எடுத்தலுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட் டாக வேண்டியிருக்கும். மேலும் ஓர் ஆண்டில் மொத்தமாக ரொக்கமாக எடுக்கும் தொகை ரூ.10 லட்சத்துக்கு அதிக மாக இருந்தால் வரி விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி கூறியதாவது, தற்போது ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பயனாளி ஒருவர் பணம் எடுக்க தன்னுடைய ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால், ரூ.5 லட்சம் பணம் எடுக் கும் ஒருவர் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் நிரூபிக்க வேண் டியதில்லை. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக் கிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை எளிதாகிவிட்ட நிலையில் ஆண் டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிய வில்லை. எனவேதான் அரசு ஆண் டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுப்பவர்களுக்கு வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க கடந்த வாரம் ஆர்டி ஜிஎஸ், என்இஎஃப்டி உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணத் தையும் ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் திட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால், அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில வருடங்களில் திரும்பப் பெறப் பட்டது.

No comments:

Post a Comment