திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், பயிற்சி மையங்களில் பள்ளிக்கூடம் செல்லாத 1,045 குழந்தைகள் சேர்ப்பு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடவடிக்கை 

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 20 முதல் மே 15-ம் தேதி வரை ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கண்டறியப்பட்ட 1,045 பள்ளிச் செல்லா குழந்தைகள் மீண்டும் பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறுமை, பள்ளிக்குச் செல்வதற்கு ஆர்வ மின்மை, ஆதரவற்ற நிலை மற் றும் பணிக்குச் செல்வது, பெற் றோர்களிடம் கல்வி குறித்த விழிப் புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக் குச் செல்லும் வயது வந்தும் கூட, பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு பள்ளிக்குச் செல்லா மல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான நட வடிக்கைகள் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கின. இதில், ஏப்ரல் 20 முதல் மே 15-ம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம், சோழவரம், பூந்தமல்லி, ஆர்.கே. பேட்டை உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள நகர்ப்புறங்களில் 4,220 குடியிருப்பு பகுதிகளில், 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தை களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குழுவினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 620 ஆண் குழந்தைகள், 425 பெண் குழந்தைகள் என 1,045 பள்ளிச் செல்லா குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. அவர் கள் அனைவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பாதியில் நின்றவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த 1,045 பள்ளிச் செல்லா குழந்தைகளில் 373 பேர் நேரடியாக பள்ளிகளில் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருங்கி ணைந்த கல்வித் திட்டம் சார்பில் பூண்டி, வில்லிவாக்கம், புழல் உள் ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் 16 நீண்ட கால சிறப்பு பயிற்சி மையங்களில் 324 பேரும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் 14 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையங்களில் 226 பேரும் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்று வருகின்றனர். 122 குழந்தைகள் திருவாலங் காடு - காவேரிராஜபுரம், மீஞ்சூர் - திருவெள்ளவாயல் ஆகிய இடங் களில் உள்ள 2 உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி உபகரணங்கள் இந்த சிறப்பு பயிற்சி மையங் கள், உண்டு உறைவிடப் பள்ளி களில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிச் செல்லா குழந்தைகள் தன்னார் வலர்கள் மூலம் எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு வழங்கப்படும் பாட நூல் கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கான சூழல் உருவாக் கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment