இரமலான் பண்டிகை 05.06.2019 புதன்கிழமை விடுமுறை

அரசு விடுமுறை பட்டியலின்படி இரமலான் பண்டிகை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 05.06.2019 புதன்கிழமை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

இன்று 05.06.2019 ரம்ஜான் தலைமை ஹாஜி அறிவிப்பு சென்னை தமிழகத்தில் பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் கொண்டாடப் படும் என்று தமிழக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள். 30 நாட்கள் நோன்பின் இறுதி யில் ரமலான் பண்டிகை கொண் டாடப்படும். இதன்படி கடந்த மே மாதம் 7-ம் தேதி பிறை தெரிந்ததை தொடர்ந்து, ரமலான் நோன்பு தொடங்கப்படுவதாக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார். அதன்படி, ரமலான் நோன்பு மே.7-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளி லும் அதிகளவிலான இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தியது டன், நோன்பு நோற்றனர். தற் போது 30 நாட்கள் நோன்பு கடந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று ஜூன் 5-ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment