ரிசர்வ் வங்கி 0.25% வட்டிக் குறைப்பு வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறைகிறது

தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவாக இப்போது வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி கள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) விகிதம் குறைக்கப்பட்டது. இதே போல வங்கிகளின் கடன் வழங்கும் அளவை அதிகரிக்க ரிவர்ஸ் ரெபோ விகிதத்தையும், அதாவது வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் கடனுக்கான வட்டியும் 5.50 சதவீதமாகக் குறைக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை தலா 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதால் மொத்தம் 0.75 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான மாதாந்திர தவணை (இஎம்ஐ) தொகையும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 உறுப்பினர்களும் ஒப்புதல் வட்டிக் குறைப்பு நடவடிக் கைக்கு நிதிக் கொள்கை வகுப்புக் குழுவில் (எம்பிசி) இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் வட்டிக் குறைப்பு நடவடிக்கை ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்துள்ளது. வளர்ச் சியை முடுக்கிவிடும் விதமாக வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 சதவீத அளவுக்கு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னர் இது 7.2 சதவீதமாக இருந்தது. பொருளாதார தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது திருத்திய மதிப்பீட்டின்படி வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சில்லறை வணிகத்தின் மீதான பணவீக்கம் 3 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. முந்தைய கணிப்பின்படி இது 2.9 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் அடுத்த அரையாண்டு காலத்தில் (அக்டோபர் முதல் மார்ச்) சில்லறை வணிகத்தின் மீதான பணவீக்கம் 3.4 சதவீதத்திலிருந்து லிருந்து 3.7 சதவீதமாக இருக்கும். முந்தைய கணிப்பின்படி இது 3.5 சதவீதத்தி லிருந்து 3.8 சதவீதமாக இருந்தது. கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், கடன் வழங்குவது அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வித் திடும். அதேசமயம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி வளத்தை சிறப்பாக பயன்படுத்து வது, பங்குச் சந்தையில் ஏற்றமிகு சூழல் ஆகியன வளர்ச்சிக்கான அறி குறிகள் எனவும் நிதிக்கொள்கைக் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.வாராக் கடன் விதிமுறை விரைவில் வெளியீடு வாராக் கடன் விதிமுறை குறித்த வழிகாட்டுதல் விரைவில் வெளியாகும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசுகையில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வங்கிகளின் வாராக் கடன் குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கிகளில் கடன்பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் 180 நாட்களுக்குள் சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் அதை திவால் நடைமுறைக்கு உட்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னர் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து மின் நிலையங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்பிஐ-யின் இந்த நோட்டீஸ் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment