ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று (02.06.2019) நடக்கிறது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பொது அறிவு, திறனறிவு... முதல்நிலை தேர்வு 2 தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் 2-ம் தாளும் என முதல்நிலை தேர்வு நடக்கிறது. காலையில் பொது அறிவு தொடர்பான தேர்வும், பிற்பகலில் திறனறிவு தொடர்பான தேர்வும் நடத்தப்பட இருக்கிறது. செல்போன், பேஜர், புளூடூத், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்துக்கு எளிதில் செல்லும் விதமாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி இன்று வாரநாட்களை போல் முதல் மெட்ரோ ரெயில் சேவை காலை 4.30 மணிக்கும், கடைசி மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.

No comments:

Post a Comment