உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

NITI RECRUITMENT 2019 | NITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இளம் வல்லுனர் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 060 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.

NITI RECRUITMENT 2019 | NITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இளம் வல்லுனர் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 060 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019. இணைய முகவரி : www.niti.gov.in
நிதி ஆயோக் அமைப்பு, தேசிய வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரைப்பது, மாநிலங்களின் வளர்ச்சித் தி்ட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறது. பிரதமரின் தலைமையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பில் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளம் வல்லுனர் பணிக்கு 60 பேரும், இன்னோவேசன் லீடு பணிக்கு 12 பேரும், மானிட்டரிங் லீடு பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சில பிரிவுகளில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக் படித்தவர்கள், மேனேஜ்மென்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம், எம்.பி.பி.எஸ்., மற்றும் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சட்டம் படித்தவர்களுக்கு இளம் வல்லுனர் பணியில் வாய்ப்பு கள் உள்ளன. முதுநிலை படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். படித்தவர்கள் மானிட்டரிங் லீடு மற்றும் இன்னோவேசன் லீடு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.niti.gov.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment