‘ஜிப்மர்’ எம்பிபிஎஸ்.ஸுக்கு நாளை நுழைவுத் தேர்வு 200 இடங்களுக்கு 1.84 லட்சம் பேர் போட்டி 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் நுழை வுத் தேர்வு நாளை (ஜூன் 2) நடை பெறுகிறது. 200 இடங்களுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதுகுறித்து ஜிப்மர் நிர் வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்து வக் கல்லூரியின் 2019 ஆண்டுக் கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 2-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறுகின்றன. 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக் கும், 50 இடங்கள் ஜிப்மர் காரைக் காலுக்கும் என மொத்தம் 200 இடங் கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1,84,272 மாணவர்கள் இத்தேர்வில் பங்கு பெறுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கவுள்ளது. நாடு முழுவதும் 132 நகரங்களில் உள்ள 280 மையங் களில் இத்தேர்வு நடக்கிறது. புதுச் சேரியில் உள்ள 7 மையங்களில் 2,279 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதிக்குள் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment