தனியார் பள்ளி கல்வி கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட கோரி வழக்கு 

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த எஸ்.எம்.அந்தோணி முத்து, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு செயல்படு கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கும் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை இந்தக் குழு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இந்த கல்விக் கட்டண விவரங் களை வகுப்பு வாரியாக இணைய தளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும் வெளியிட உத்தர விட வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், தாரணி அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பான விரிவான உத்தரவை பிறப்பிப் பதாகக் கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment