உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, May 29, 2019

அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஆய்வக பொருட்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு என மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்கான டெண்டர் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வகப் பொருட்கள், புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இதில் பெருமளவு முறைகேடு நடைபெறுகிறது. இந்த முறைகேட்டில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டில் வாங்கிய ஆய்வக பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். 2018-19-ம் கல்வியாண்டில் ஆய்வக பொருட்கள், புத்தகங்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment