சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியரகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி அனைத்து வகை பள்ளி களும் பள்ளிக்கல்வித் துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அந்த வகையில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்த பள்ளிகள் வழங்கும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாக கருதப்படும். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவும் முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள் இதுவரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதுதவிர நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்த பள்ளிகள் வழங்கும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாக கருதப்படும்.

No comments:

Post a Comment