உதவி மின்பொறியாளர் பணிக்கு விதிப்படி தேர்வு நடைபெற்றதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

உதவி மின்பொறியாளர் பணிக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தேர்வு நடத்தப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), உதவி மின்பொறியாளர் பணியிடங் களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தி 325 பேரை தேர்வு செய்தது. இதில் 36 பேர் வெளிமாநிலங் களில் இருந்து தேர்வு செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணி களில் வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர் களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவ தாக பரவலாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் மின்வாரியம் நடத்திய தேர்விலும், பிற மாநிலத்தவர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு விதிமுறை களைப் பின்பற்றித்தான் உதவி மின் பொறியாளர் தேர்வு நடத்தப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மின்வாரியத்துக்கு 325 உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வௌியிடப்பட்டது. மார்ச் 6-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள். 80 ஆயிரம் பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வு, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதற்கு 1 பதவிக்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டனர். இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்பு இப்பதவிக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்துள்ளவர்களை அழைத்து நேர் முகத் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் புகார் கிளம்பியதையடுத்து, இந்த முறை எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப் பட்டது. அதுவும் முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டுவரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாக வேண்டுமெனில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பணியாளர்கள் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதில், தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்த வர்களும் பங்கேற்கலாம் என வழிவகை செய்யப்பட்டது. இந்த திருத்த விதிமுறையைப் பின்பற்றிதான் இத்தேர்வு நடத்தப் பட்டது. மின்வாரியம் தன்னிச்சையாக முடிவெடுத்து இத்தேர்வை நடத்த வில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மின்வாரியம் பணியாளர் களை தேர்வு செய்தது. அத்தேர்விலும் வௌிமாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் பட்டனர். அத்தேர்வும் அரசு விதிமுறை யைப் பின்பற்றித்தான் நடைபெற்றது. உதவி மின்வாரிய பொறியாளர் பதவிக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அலுவல் மொழி யான தமிழை கற்றுக் கொள்ள 2 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment