உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, May 30, 2019

பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி  நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல் 

பெற்றோர், ஆசிரியர் கழகங் களை தொண்டு நிறுவனமாக மாற்றி, நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண் டும் என்று பள்ளி தலைமை யாசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிக மான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பள்ளிக்கல்விக்கு மற்ற துறை களைவிட அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.28 ஆயிரத்து 757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மாணவர் களுக்கு அரசு சார்பில் வழங் கப்படும் மடிக்கணினி, சைக்கிள் உட்பட 14 வகை இலவச பொருட் களுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது. எஞ்சியுள்ள நிதியைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்து வது கல்வித் துறைக்கு சவாலாக உள்ளது. இதை சமாளிக்க நன் கொடைகள் பெற்று அரசுப் பள்ளி களின் தரத்தை உயர்த்தும் வழி முறையை தமிழக அரசு சமீப காலமாக பின்பற்றி வருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி களின் நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு கிடைக்க அரசுகள் வழிவகுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும் போது, “முன்னாள் மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் உதவியுடன் சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், நூலகம் போன்ற பள்ளி களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். அந்த வகையில் நாங்கள் உதவி கேட்டு அணுகும்போது பெரும் பாலானவர்களின் விருப்பமாக இருப்பது வரிவிலக்குதான். அரசுப் பள்ளிக்கு வழங்கும் நன்கொடைக்கு அவர்கள் வரி விலக்கு எதிர்பார்க்கின்றனர். இதை கருத்தில் கொண்டு நன்கொடை யாளர்களுக்கு வரி விலக்கு கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். ஐடி ஊழியரான ராஜேஷ் என்பவர் கூறும்போது, ‘‘நான் பின்தங்கிய கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்தவன். இப்போது பிரபல தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். அதற்கு நான் படித்த பள்ளி முக்கிய காரணமாக உள்ளது. அதனால் படித்த பள்ளிக்கு உதவ மனம் விரும்புகிறது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் நாம் வரிகளை செலுத்துகிறோம். அதில் மத்திய அரசு கல்விக்கு குறைந்த நிதியே தருகிறது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக் கினாலும் செலவினத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை. நமது வரிப்பணம் கல்வி வளர்ச்சிக்கு முறையாக சேருவதில்லை. எனி னும், படித்த பள்ளிக்கு உதவி கோரும்போது மனமுவந்து செய்யவே விரும்புகிறோம். அதற்கு வரிவிலக்கு கிடைத்தால் இன்னும் அதிகமாக உதவி செய்ய முடியும். என்னைப்போல பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள்’’ என்றார். இதுகுறித்து இடைநிலை ஆசிரி யர் இயக்கத்தின் பொதுச்செய லாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது: பிற நாடுகளில் கல்வித் துறைக்கு நம்மைவிட அதிகமாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ கத்தில் நிதிப் பற்றாக் குறையால் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி களும், தேவைக்கு ஏற்ற நவீன உபகரணங்களும் எட்டாக் கனி யாகவே உள்ளன. இதைத் தவிர்க்கவே அரசுப் பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் உதவிகளை பெற்று கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்திக் கொள்ள அரசு உத்தர விட்டது. அரசு அழைப்பை ஏற்று கடந்த ஆண்டில் பல நிறுவனங் களின் உதவியால் 519 பள்ளிகளில் ரூ.58 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இந்த ஆண்டும் நன்கொடை பெற்று பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முயற் சித்து வருகிறோம். இதற்கிடையே அரசுப் பள்ளி யில் படித்த முன்னாள் மாண வர்கள் பலரும் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் எல்லாரும் உதவ தயாராகவே உள்ளனர். அதற்கு வரிவிலக்கு கிடைத் தால் இன்னும் கூடுதலாக உதவி செய்வார்கள். அரசு ஊழியர், ஆசிரி யர்கள் என வரி செலுத்துபவர் கள் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக்கு அதிகமாகவே உதவ முன்வருவர். அவர்களுக்கு கூடுதலாக வரி சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் அரசு நினைக் கும் இந்த திட்டம் விரைவாகவே முழுமையடையும். ஒருசில ஆண்டுகளிலேயே அனைத்துப் பள்ளிகளும் முழு வசதிகளை பெற்றுக்கொள்ளும். இதற்கு அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை தொண்டு நிறுவனங் களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குழுவில் அனைத்து நடவடிக்கைகளும் தீர்மானம் இயற்றியே செயல்படுத்தப்படு வதால் முறைகேடுகளும் நடை பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசு கல்விக்கு குறைந்த நிதியே தருகிறது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கினாலும் செலவீனத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை. நமது வரிப்பணம் கல்வி வளர்ச்சிக்கு முறையாக சேருவதில்லை. எனினும், படித்த பள்ளிக்கு உதவி கோரும்போது மனமுவந்து செய்யவே விரும்புகிறோம். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment