அனைத்து பட்ட படிப்புகளிலும் சுற்றுச்சூழல் பாடம் கட்டாயம்

நாடு முழுவதும், சுற்றுச்சூழலை பாதுகாக்க, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அரசு துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பல்கலையிலும், சுற்றுச்சூழல் படிப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை:அனைத்து பல்கலைகளும், அனைத்து பட்டப் படிப்புகளிலும், சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு பாடம் வைக்க வேண்டியது கட்டாயம். இதற்காக, ஆறு மாத காலம் வகுப்புகள் நடத்தும் அளவுக்கு, பாட திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த நடைமுறையை, இந்தாண்டு கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment