பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தாத 9,209 பள்ளி வாகனங்களில் விரைவில் சோதனை போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

தமிழகத்தில் இதுவரை 23,808 பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள் ளன. மேலும், ஆய்வு செய்ய வேண்டிய 9,209 பள்ளி வாகனங்களிலும் விரைவில் ஆய்வு நடத்த வேண்டும் என ஆர்டிஓக்களுக்கு போக்கு வரத்து ஆணையரகம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில், பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 16 அம்சங்கள் பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடந்த ஒரு மாதமாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்டிஓ) ஆய்வு நடத்தி வருகின்றனர். வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுப்பாடு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. 23,808 வாகனங்களில் ஆய்வு அந்த வகையில், தமிழகம் முழுவதும் 86 வட்டார போக்கு வரத்து அலுவலகங்களிலும் இதுவரை மொத்தம் 23,808 பள்ளி வாகனங்களில் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள் ளன. இதில், சிறு, சிறு பாது காப்பு குறைபாடுகள் இருந்த 1,633 வாகனங்கள் கண்டறியப் பட்டு, அவற்றை சரிசெய்து மறுஆய்வு செய்ய போக்கு வரத்து ஆணையரகம் உத்தர விட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள 9,209 வாகனங்களிலும் விரைவாக முழு ஆய்வு நடத்தி பாது காப்பை உறுதிப்படுத்த வேண் டும் என ஆர்டிஓக்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment