ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர் கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வெளியிட்டது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 12-ந் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூன் மாதம் 8-ந் தேதியும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் 9-ந் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment