உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

கல்வி தொலைக்காட்சி சோதனை ஓட்டம் ஜூன் 6 முதல் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பு தொடங்கும்

அரசு கேபிளில் கல்வி தொலைக் காட்சி சேனலின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதிகார பூர்வமாக ஜூன் 6 முதல் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டமாக நிகழ்ச்சி களுக்கான படபிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளி பரப்பை ஜூன் 6-ம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வி தொலைக்காட்சி சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப் பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர் களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப் பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் களின் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக் கான முக்கிய சுற்றறிக்கைகள், கல் வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். 200-வது அலைவரிசை இதன்மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடு களையும் மாணவர்கள், ஆசிரி யர்கள், பொதுமக்கள் உடனுக் குடன் தெரிந்து கொள்ள முடியும். நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலை யில் அரசு கேபிளில் 200-வது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் 6 முதல் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 53 ஆயிரம் பள்ளிகளில் இதுதவிர மாநிலம் முழுவதும் 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக் காட்சி வசதிகள் செய்யப்பட் டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment